உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அர்ஷ்தீப், மந்தனா பரிந்துரை: ஐ.சி.சி., விருதுக்கு

அர்ஷ்தீப், மந்தனா பரிந்துரை: ஐ.சி.சி., விருதுக்கு

துபாய்: ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் மந்தனா, அர்ஷ்தீப் சிங் பரிந்துரை செய்யப்பட்டனர்.ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும். நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதன்படி, சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டில் விளையாடிய 13 ஒருநாள் போட்டியில், 4 சதம், 3 அரைசதம் உட்பட 747 ரன் குவித்துள்ள மந்தனா, இந்த ஆண்டு அதிக ரன் எடுத்த வீராங்கனைகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவரது சராசரி 57.46, 'ஸ்டிரைக் ரேட்' 95.15 ஆக உள்ளது.மந்தனாவை தவிர, தென் ஆப்ரிக்காவின் லாரா வோல்வார்ட், இலங்கையின் சமாரி, ஆஸ்திரேலியாவின் அனாபெல் சுதர்லேண்ட் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.சிறந்த சர்வதேச 'டி-20' போட்டி வீரருக்கான விருதுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டில் விளையாடிய 18 போட்டியில், 36 விக்கெட் சாய்த்துள்ள அர்ஷ்தீப், அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தை இலங்கையின் ஹசரங்காவுடன் பகிர்ந்து கொண்டார். 'டி-20' உலக கோப்பையில் 'வேகத்தில்' மிரட்டிய அர்ஷ்தீப், 17 விக்கெட் கைப்பற்றினார்.அர்ஷ்தீப் சிங்குடன் பாகிஸ்தானின் பாபர் ஆசம், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஜாவும் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.விருதுக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளின் பெயர் அடுத்த மாத இறுதியில் அறிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை