உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பைனலில் இந்திய பெண்கள் * யூத் ஆசிய டி-20 கிரிக்கெட்டில்...

பைனலில் இந்திய பெண்கள் * யூத் ஆசிய டி-20 கிரிக்கெட்டில்...

கோலாலம்பூர்: யூத் ஆசிய கோப்பை 'டி-20' பைனலுக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி. நேற்று நடந்த 'சூப்பர்-4' போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.மலேசியாவில் பெண்களுக்கான யூத் ஆசிய கோப்பை (19 வயது) 'டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 'சூப்பர்-4' சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்தியா, பீல்டிங் தேர்வு செய்தது.ஆயுஷி 'நான்கு'இலங்கை அணிக்கு சஞ்சனா (9), ஹிருனி (2) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. சுமுது (21) ரன் அவுட்டானார். கேப்டன் மனுதி 30 பந்தில் 33 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கில் திரும்பினர். இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 98 ரன் மட்டும் எடுத்தது. இந்தியா சார்பில் சுழலில் மிரட்டிய ஆயுஷி 4, பாருனிகா 2 விக்கெட் சாய்த்தனர்.கமலினி கலக்கல்எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஈஷ்வரி (0), கமலினி ஜோடி துவக்கம் தந்தது. சனிகா (4) ஏமாற்றினார். பின் இணைந்த திரிஷா, கமலினி ஜோடி அணியை மீட்டது. திரிஷா 32, கமலினி 28 ரன் எடுத்தனர். கேப்டன் நிகி (3) கைவிட்ட போதும், பின் வரிசையில் மிதிலா (17) உதவ, இந்திய அணி 14.5 ஓவரில் 102/6 ரன் எடுத்து வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.வங்கத்துடன்...நேற்று நடந்த மற்றொரு போட்டியில் வங்கதேச அணி (58/1), நேபாளத்தை (54/8) வீழ்த்தியது. இதையடுத்து 'சூப்பர்-4' பட்டியலில் இந்தியா (7 புள்ளி), வங்கதேசம் (6) முதல் இரு இடம் பிடித்தன. நாளை நடக்கும் பைனலில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. நேபாளம் (4), இலங்கை (3) வெளியேறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ