மேலும் செய்திகள்
இளம் இந்தியா ரன் குவிப்பு: வைபவ், திரிவேதி சதம்
01-Oct-2025
புதுடில்லி: பெண்களுக்கான ஆசிய கோப்பை 'டி-20' முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இலங்கையில் பெண்களுக்கான ஆசிய கோப்பை 'டி-20' கிரிக்கெட் தொடரின் 9 வது சீசன், ஜூலை 19ல் துவங்குகிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், யு.ஏ.இ., அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதியில் (ஜூலை 26) மோதும். பைனல் ஜூலை 28ல் நடக்க உள்ளது. இதுவரை 8 தொடரிலும் பைனலுக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி, 7ல் கோப்பை வென்றது. மொத்தம் பங்கேற்ற 46 போட்டியில் 43ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. இதற்கான இந்திய அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா உள்ளனர்.இம்முறை இந்திய அணி தனது முதல் போட்டியில் (ஜூலை 19, இரவு 7:00 மணி), பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அடுத்து யு.ஏ.இ., (ஜூலை 21), நேபாள (ஜூலை 23) அணிகளுடன் மோதும்.
01-Oct-2025