உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆப்கானிஸ்தான் பிடியில் தப்புமா ஆஸ்திரேலியா

ஆப்கானிஸ்தான் பிடியில் தப்புமா ஆஸ்திரேலியா

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. இதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறும் கனவில் ஆப்கானிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று முன் தினம் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இந்த நம்பிக்கையுடன் இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. பேட்டிங் பலம்: ஆஸ்திரேலியா 2006, 2009ல் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 2013, 2017ல் பைனலுக்கு தகுதி பெறவில்லை. தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கோப்பை வெல்லும் இலக்குடன் உள்ளது. ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஹேசல்வுட் என் மூன்று முன்னணி பவுலர்கள் இல்லாதது பலவீனம். இதை பயன்படுத்திய இங்கிலாந்து, முதல் போட்டியில் 50 ஓவரில் 351/8 குவித்தது. பின் ஜோஷ் இங்லிஸ் சதம் விளாச, ஆஸ்திரேலியா 47.3 ஓவரில் 356/5 ரன் எடுத்து வென்றது. பவுலிங் பலவீனத்தை, பேட்டிங் பலத்தை கொண்டு சரி செய்கிறது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், லபுசேன், மேக்ஸ்வெல், இங்லிஸ் ரன் குவிக்க தயாராக உள்ளனர். 'சுழலில்' அனுபவ ஜாம்பா கைகொடுக்கலாம். டிவார்ஷியஸ், ஸ்பென்சர் ஜான்சன், எல்லிஸ் உள்ளிட்ட மற்ற பவுலர்களும் அசத்தினால் தான், ஆப்கானிஸ்தானை வீழ்த்த முடியும். 'சுழல்' ஜாலம்: ஆப்கானிஸ்தான் அணி இப்ராகிம் ஜத்ரனை நம்பி களமிறங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிராக 177 ரன் விளாசி, வெற்றிக்கு கைகொடுத்தார். கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி, நபி அசத்தலாம். இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய 'வேகப்புயல்' ஓமர்சாய், ரஷித் கான், நபி, நுார் அகமது அடங்கிய 'சுழல்' கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு தொல்லை கொடுக்கலாம்.சச்சின் பாராட்டுசாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இங்கிலாந்தை வென்ற ஆப்காஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.சச்சின்: சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறது. இவர்கள் அதிர்ச்சி வெற்றி பெற்றதாக இனி கூற முடியாது. இங்கிலாந்துக்கு எதிராக ஜத்ரன் (177 ரன்), ஓமர்சாய் ( 5 விக்.,) அசத்தினர். இன்னொரு மறக்க முடியாக வெற்றியை பெற்றனர். ரவி சாஸ்திரி: ஆப்கானிஸ்தான் அணியினர் அபாரமாக ஆடினர். இந்திய துணை கண்டத்தில் இங்கிலாந்து அணி சொதப்புகிறது.அஜய் ஜடேஜா: கிரிக்கெட் மோகம் கொண்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள், இந்த வெற்றியை கொண்ட தகுதி வாய்ந்தவர்கள்.மைக்கேல் வான் (இங்கி.,): கடந்த இரு ஆண்டாக 'ஒயிட் பால்' கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஏமாற்றம் அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியினர் அசத்தினர். போட்டியின் முடிவு வியப்பு அளிக்கவில்லை. மிரட்டும் மேக்ஸ்வெல்ஆப்கானிஸ்தான் அணிக்கு மேக்ஸ்வெல் தான் எப்போதும் 'வில்லன்'. * உலக கோப்பை லீக் போட்டியில் (2023, மும்பை) ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 291/5 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவரில் 91/7 ரன் எடுத்து தத்தளித்தது. தனிநபராக போராடிய மேக்ஸ்வெல் 201 ரன் விளாச, ஆஸ்திரேலியா 46.5 ஓவரில் 293/7 ரன் எடுத்து வென்றது. * அடுத்து, 2024ல் நடந்த 'டி-20' உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் (148/6), ஆஸ்திரேலியாவை (19.2ல் 127 ரன்) வீழ்த்தி, பதிலடி கொடுத்தது. மேக்ஸ்வெல் (59 ரன்) போராட்டம் வீணானது. இன்றும் மேக்ஸ்வெல் மிரட்டலாம். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி கூறுகையில்,''உலக கோப்பை (2023) போட்டியில் எங்களுக்கு எதிராக மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடியது தெரியும். அது கடந்து போன சரித்திரம். இதற்கு பின் 'டி-20' உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவை வென்றோம். இன்று மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டும் விளையாட போவதில்லை. ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியை சாய்க்க திட்டம் வகுத்துள்ளோம். லாகூர் ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும். எங்களது 'ஸ்பின்னர்'கள் மீண்டும் சாதிப்பர்,''என்றார்.ரசிகர்கள் உற்சாகம்இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடினர். காபுல் உள்ளிட்ட நகரங்களின் தெருவில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பைக், நெருப்பு சாகசம், ஆட்டம் பாட்டம், வாணவேடிக்கையுடன் வெற்றியை கொண்டாடினர். மும்முனைப் போட்டி'பி' பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறியது. தென் ஆப்ரிக்கா (3 புள்ளி), ஆஸ்திரேலியா (3), ஆப்கானிஸ்தான் (2) அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இன்று லாகூரில் நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மோதுகின்றன. நாளை கராச்சியில் நடக்கும் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன.மூன்று அணிகளின் அரையிறுதி வாய்ப்பு எப்படி:* ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா வென்றால், தலா 5 புள்ளிகளுடன், அரையிறுதிக்கு முன்னேறும்.* ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வென்றால், ஆஸ்திரேலியா (5), தென் ஆப்ரிக்கா (3) அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் (2) வெளியேறும்.* ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா வென்றால், தென் ஆப்ரிக்கா (5), ஆப்கானிஸ்தான் (4) அரையிறுதிக்குள் நுழையும். ஆஸ்திரேலியா (3) வெளியேறும்.* ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் (4) அரையிறுதிக்கு முன்னேறும். 'ரன்-ரேட்' அடிப்படையில் ஆஸ்திரேலியா (3) அல்லது தென் ஆப்ரிக்கா (3) அரையிறுதிக்கு செல்லும்.* இரு போட்டிகளும் மழையால் ரத்தானால், தென் ஆப்ரிக்கா (4), ஆஸ்திரேலியா (4) அரையிறுதிக்கு முன்னேறும். ஆப்கானிஸ்தான் (3) வெளியேறும்.* லாகூரில் இன்று மழை வர 75% வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இப்போட்டி மழையால் ரத்தானால் ஆஸ்திரேலியா (4) அரையிறுதிக்கு முன்னேறும். நாளை கராச்சியில் நடக்கவுள்ள போட்டியில் தென் ஆப்ரிக்கா (5) வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் (3) வெளியேறும். இங்கிலாந்து வென்றால் 'ரன்-ரேட்' அடிப்படையில் தென் ஆப்ரிக்கா (3) அல்லது ஆப்கானிஸ்தான் (3) அரையிறுதிக்கு தகுதி பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ