உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / டிராவிஸ் ஹெட் சரவெடி * ஆஸி., அசத்தல் வெற்றி

டிராவிஸ் ஹெட் சரவெடி * ஆஸி., அசத்தல் வெற்றி

சவுத்தாம்ப்டன்: முதல் 'டி-20' போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது.ஹெட் விளாசல்ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், மாத்யூ ஷார்ட் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சாம் கர்ரான் வீசிய ஓவரில் 30 ரன் விளாசிய ஹெட், 19 வது பந்தில் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 86 ரன் சேர்த்த போது, ஹெட் (59 ரன், 23 பந்து) அவுட்டானார். ஷார்ட் (41), இங்லிஸ் (37) கைகொடுத்தனர். கேப்டன் மிட்சல் மார்ஷ் (2) நிலைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 179 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.அபாட் அபாரம்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பில் சால்ட்(20), வில் ஜாக்ஸ் (6), ஜோர்டான் காச் (17), லிவிங்ஸ்டன் (37), சாம் கர்ரான் (18) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இங்கிலாந்து அணி 10.2 ஓவரில் 151 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. ஆஸ்திரேலியாவின் அபாட் 3 விக்கெட் வீழ்த்தினார்.4, 4, 6, 6, 6, 4சாம் கர்ரான் வீசிய 4வது ஓவரில் ரன் மழை பொழிந்தார் ஹெட். முதல் 2 பந்தில் பவுண்டரி (4, 4) அடித்த இவர், அடுத்த 3 பந்துகளை சிக்சருக்கு (6, 6, 6) விரட்டினார். கடைசி பந்திலும் பவுண்டரி அடிக்க, ஒரே ஓவரில் ஹெட், 30 ரன் (4, 4, 6, 6, 6, 4) விளாசினார். பாண்டிங், பின்ச், மேக்ஸ்வெல், கிறிஸ்டியன், மிட்சல் மார்ஷலுக்கு அடுத்து 'டி-20'ல் ஒரே ஓவரில் 30 ரன் எடுத்த 6வது ஆஸ்திரேலிய வீரர் ஆனார்.7 முறை'டி-20' அரங்கில் 'பவர் பிளே' ஓவருக்குள் (முதல் 6) அதிக அரைசதம் விளாசிய வீரர்களில், 4வது இடத்தை பின் ஆலன் (நியூசி.,), குர்பாசுடன் (ஆப்கன்) பகிர்ந்து கொண்டார் ஹெட். இவர்கள் 7 முறை அரைசதம் அடித்தனர். முதல் 3 இடத்தில் கெய்ல் (10, வெ.இண்டீஸ்), ஜேசன் ராய் (10, இங்கிலாந்து), வார்னர் (9, ஆஸி.,), பால் ஸ்டிர்லிங் (8, அயர்லாந்து), அலெக்ஸ் ஹேல்ஸ் (8, இங்கிலாந்து) உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை