மேலும் செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி * வீழ்ந்தது வங்கதேசம்
26-Nov-2024
கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் அசத்திய வங்கதேச அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடந்தது.முதல் இன்னிங்சில் வங்கதேசம் 164, வெஸ்ட் இண்டீஸ் 146 ரன் எடுத்தன. ஷாத்மன் இஸ்லாம் (46), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (46), ஜாகர் அலி (91) கைகொடுக்க வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 268 ரன் எடுத்தது.பின், 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (43), கவேம் ஹாட்ஜ் (55) ஆறுதல் தந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 5, ஹசன் மஹ்முத், டஸ்கின் அகமது தலா 2 விக்கெட் சாய்த்தனர்.டெஸ்ட் தொடர் 1-1 என சமன் ஆக, இரு அணிகளும் கோப்பை பகிர்ந்து கொண்டன. ஆட்ட நாயகன் விருதை வங்கதேசத்தின் தைஜுல் இஸ்லாம் வென்றார். வங்கதேசத்தின் டஸ்கின் அகமது (11 விக்கெட், 23 ரன்), வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ் (10 விக்கெட், 28 ரன்) தொடர் நாயகன் ஆகினர்.
வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய வங்கதேச அணி, 15 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக கரீபிய மண்ணில் டெஸ்டில் வெற்றி பெற்றது. கடைசியாக 2009ல் கிங்ஸ்டன், செயின்ட் ஜார்ஜியாவில் நடந்த டெஸ்டில் அடுத்தடுத்து வென்ற வங்கதேச அணி 2-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
26-Nov-2024