| ADDED : ஆக 13, 2024 11:19 PM
மும்பை: புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக பங்கேற்க சூர்யகுமார், ஸ்ரேயாஸ் தமிழகம் வரவுள்ளனர்.இந்திய அணி முன்னாள் வீரர் மறைந்த புச்சி பாபு. தென் இந்திய கிரிக்கெட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது பெயரில் தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், புச்சி பாபு கிரிக்கெட் தொடர் (தலா 4 நாள் கொண்டது) 1909-10 முதல் நடத்தப்படுகிறது. 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட இத்தொடர், 2023 முதல் மீண்டும் துவக்கப்பட்டது.இதன் 2024 சீசன் ஆக. 15-செப். 11 வரை தமிழகத்தில் நடக்கவுள்ளது. 10 மாநிலங்களில் இருந்து, 12 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி முதலில் லீக் முறையில் நடத்தப்படும். முதலிடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் ஆக. 27-30ல் நடக்கும் மூன்றாவது கட்ட போட்டியில் கிரிக்கெட் சங்க லெவன் அணிக்கு எதிராக, மும்பை அணிக்காக இந்திய 'டி-20' அணி கேப்டன் சூர்யகுமார், ஸ்ரேயாஸ் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். இஷான் கிஷான் வருகைமுதல் தர போட்டிகளில் பங்கேற்காத ஸ்ரேயாஸ், இஷான் கிஷானை, இந்திய கிரிக்கெட் போர்டு சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது. தவிர இந்திய அணி தேர்விலும் புறக்கணித்தது. ஸ்ரேயாஸ் இலங்கை தொடரில் சேர்க்கப்பட்டார். தற்போது வங்கதேச, நியூசிலாந்து தொடர் வரவுள்ள நிலையில், இஷான் கிஷான் புச்சிபாபு தொடரில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இவர் ஜார்க்கண்ட் அணி கேப்டனாக களமிறங்குகிறார்.நத்தத்தில் அரையிறுதிபுச்சி பாபு கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் கோவை, திருநெல்வேலி, நத்தம், சேலம் என நான்கு மைதானங்களில் நடத்தப்படுகிறது. அரையிறுதி போட்டிகள் செப். 2-5ல் நத்தம், திருநெல்வேலியில் நடக்கும். பைனல் (செப். 8-11) நடக்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.கடின பிரிவில் தமிழகம்தமிழகம் சார்பில் இரு அணிகள் பங்கேற்கின்றன. தமிழக கிரிக்கெட் சங்க லெவன் அணி, மும்பை, ஹரியானாவுடன் 'சி' பிரிவில் உள்ளது. தமிழக பிரசிடென்ட் லெவன் அணி, குஜராத், ரயில்வேசுடன் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.