உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சென்னை-பெங்களூரு மோதல்: பிரிமியர் லீக் அட்டவணை வெளியீடு

சென்னை-பெங்களூரு மோதல்: பிரிமியர் லீக் அட்டவணை வெளியீடு

புதுடில்லி: பிரிமியர் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியானது. வரும் ஏப். 5ல் நடக்கும் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.பிரிமியர் தொடருக்கான 19வது சீசன், வரும் மார்ச் 28ல் துவங்குகிறது. பைனல், மே 31ல் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள், 84 போட்டிகளில் விளையாடுகின்றன. தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பது, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக வெளிநாட்டு வீரர்களின் பயணத்திட்டத்தை மேற்கொள்ள வசதியாக, முதற்கட்டமாக 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டது. விரைவில் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும்.வரும் மார்ச் 28ல் பெங்களூருவில் நடக்கும் முதல் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு அணி, ஐதராபாத் அணியை சந்திக்கிறது. சென்னை அணி, தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை (மார்ச் 30, இடம்: கவுகாத்தி, அசாம்) எதிர்கொள்கிறது. ஏப். 3ல் சென்னையில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஏப். 5ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் பெங்களூரு, சென்னை அணிகள் விளையாடுகின்றன. பின், ஏப். 11ல் சென்னையில் நடக்கும் போட்டயில் சென்னை அணி, டில்லியை சந்திக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ