உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி: கோப்பை வென்றது ஆப்கன்

தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி: கோப்பை வென்றது ஆப்கன்

சார்ஜா: மூன்றாவது ஒருநாள் போட்டியில் மார்க்ரம் அரைசதம் விளாச, தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி 2-1 என கோப்பை வென்றது.சார்ஜா சென்றுள்ள தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றன. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தான், ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.சார்ஜாவில் மூன்றாவது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (89) நம்பிக்கை தந்தார். அப்துல் மாலிக் (9), ரஹ்மத் ஷா (1) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, ஆப்கானிஸ்தான் அணி 34 ஓவரில் 169 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (26), கேப்டன் டெம்பா பாவுமா (22), ரீசா ஹென்டிரிக்ஸ் (18) ஆறுதல் தந்தனர். அபாரமாக ஆடிய மார்க்ரம் அரைசதம் கடந்த வெற்றிக்கு உதவினார். தென் ஆப்ரிக்க அணி 33 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 170 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மார்க்ரம் (69), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !