ராபின் ஸ்மித் மரணம்
பெர்த்: இங்கிலாந்து அணி முன்னாள் பேட்டர் ராபின் ஸ்மித் 62. கடந்த 1988-96ல் மொத்தம் 62 டெஸ்டில், 9 சதம் உட்பட 4236 ரன் எடுத்துள்ளார். அம்புரோஸ், வால்ஷ், மார்ஷல், பாட்ரிக் பேட்டர்சன் என மிரட்டலான பவுலர்களை கொண்ட வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து இரு முறை 'டிரா' செய்ய, ஸ்மித் பேட்டிங் உதவியது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக நேற்று அவரது வீட்டில் மரணம் அடைந்தார். கால்பந்து வீரர்கள் மீது தாக்குதல்பாரிஸ்: பிரான்சில் நடக்கும் 'லீக்-1' கால்பந்து தொடரில், நைஸ் அணி 1-3 என லோரியன்ட் அணியிடம் தோற்றது. இத்தொடரில் தொடர்ந்து அடைந்த 6வது தோல்வி இது. இதுவரை 14 போட்டியில் 16 புள்ளியுடன் (5 வெற்றி, 2 'டிரா', 7 தோல்வி), 10வது இடத்தில் உள்ளது. பின் நைஸ் அணி வீரர்கள் சென்ற பஸ்சிற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள், எதிர்ப்பு குரல் எழுப்பினர். வீரர்கள், பயிற்சியாளர்கள் முகத்தில் 'பன்ச்' செய்தனர். இதற்கு அணி நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.விலகினார் முர்ரே டென்னிஸ் அரங்கில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் செர்பியாவின் ஜோகோவிச் 38. இவரது பயிற்சி குழுவில், முன்னாள் வீரர் பிரிட்டனின் ஆன்ட்டி முர்ரே 38, கடந்த 2024, நவம்பரில் இணைந்தார். ஆனால் மூன்று மாதத்தில் விலகினார். முர்ரே கூறுகையில்,'' ஜோகோவிச்சிற்கு பயிற்சி கொடுத்தது மகிழ்ச்சி. இதற்காக எனது திறமை முழுவதையும் பயன்படுத்தினேன். இது வியக்கத்தக்க அனுபவம். குறுகிய காலத்தில் விலகியது ஏமாற்றமாக இருந்தது,'' என்றார்.* சீனாவின் செங்டுவில் சர்வதேச டேபிள் டென்னிஸ் கலப்பு அணிகளுக்கான உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் முதல் லீக் போட்டியில் ஜப்பானிடம் தோற்ற இந்தியா, நேற்று தனது இரண்டாவது போட்டியில் 5-8 என ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. அடுத்த சுற்றுக்கு தகுதிபெறத் தவறியது.* டில்லியில் 'இந்தியன் பிக்கிள்பால் லீக்' தொடர் நடக்கிறது. சென்னை, பெங்களூரு உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை அணி தனது முதல் போட்டியில் 5-1 என்ற கணக்கில் மும்பை அணியை வென்றது. * ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி, சிலியின் சாண்டியாகோ நகரில் நடக்கிறது. 24 அணிகள் விளையாடுகின்றன. 'சி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, இன்று தனது இரண்டாவது போட்டியில் வலிமையான ஜெர்மனியை எதிர்கொள்கிறது. * ஆஸ்திரேலிய அணி 'ஆல் ரவுண்டர்' மேக்ஸ்வெல். கடந்த பிரிமியர் சீசலில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். பிரிமியர் அரங்கில் இருந்து விடைபெற முடிவு செய்த மேக்ஸ்வெல், இம்முறை ஏலத்தில் பங்கேற்கவில்லை. * ராஜஸ்தானில் நடக்கும் கேலோ இந்தியா பல்கலை., விளையாட்டில் சண்டிகரின் தான்யா, 'ஹாம்மர் த்ரோ' போட்டியில் தங்கம் கைப்பற்றினார்.