உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோலி மீண்டும் கேப்டன் * பெங்களூரு அணிக்கு...

கோலி மீண்டும் கேப்டன் * பெங்களூரு அணிக்கு...

புதுடில்லி: பெங்களூரு அணிக்கு கோலி மீண்டும் கேப்டனாக உள்ளார்.இந்திய அணி 'சீனியர்' கோலி 35. ஐ.பி.எல்., தொடரில் 2013 முதல் 2021 வரை பெங்களூரு அணி கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் 2016ல் பைனல் வரை சென்றது. கடந்த 2021ல் இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது, பெங்களூரு அணி கேப்டனாகவும் நீடிக்க மறுத்து விட்டார்.டுபிளசி கேப்டனாக செயல்பட்டார். தற்போது 40 வயதாகும் டுபிளசியை, அணி நிர்வாகம் விடுவிக்க உள்ளது. இதனால் இந்திய அணி இளம் வீரர் சுப்மன் கில்லை, பெங்களூரு அணியில் சேர்க்க முயற்சி நடந்தன. ஆனால் சுப்மன், குஜராத் அணியில் தொடர உள்ளார். அடுத்து விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட்டை வாங்க முயற்சிக்கிறது.ஒவ்வொரு அணியும் இறுதியாக தக்கவைக்கும் 6 வீரர்கள் விபரம் இன்று வெளியாகிறது. இதில் டில்லி அணி அக்சர் படேலை கேப்டனாக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் ரிஷாப் பன்ட் அணி மாற திட்டமிட்டு வருகிறார். ஒருவேளை, ரிஷாப் விடுவிக்கப்பட்டால், ஏலத்தில் வாங்க, பெங்களூரு போட்டியிடும். இதனிடையே அணியின் நலனுக்காக கோலி, தனது முடிவை மாற்றிக் கொள்ள உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன. வரும் 2025 சீசனில் மீண்டும் பெங்களூரு அணி கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது.ஸ்ரேயாஸ், ராகுல் விடுவிப்புகோல்கட்டா அணிக்கு மூன்று சீசனில் கேப்டனாக இருந்தவர் ஸ்ரேயாஸ். இவரை தக்கவைக்க அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் ஸ்ரேயாஸ், அதிகப்படியாக தொகை கேட்பதால், கோல்கட்டா நிர்வாகம் விடுவித்துள்ளதாக தெரிகிறது. வரும் ஏலத்தில் ஸ்ரேயாஸ் இடம் பெறலாம்.லக்னோ அணிக்கு புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமிக்கப்படலாம். இதற்காக அணி நிர்வாகத்தை அவர் சந்தித்துள்ளார். இதனால் தற்போதைய கேப்டன் ராகுல், அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார். பெங்களூரு, பஞ்சாப், டில்லி, கோல்கட்டா அணிகள் இவரை வாங்க போட்டியிடலாம்.சென்னையில் யார்சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் (ரூ. 18 கோடி), ஜடேஜா (ரூ. 18 கோடி), பதிரானா (ரூ. 14 கோடி), ரச்சின் ரவிந்திரா (ரூ. 11 கோடி), தோனி (ரூ. 4 கோடி) என ஐந்து வீரர்கள் தக்கவைக்கப்படலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ