இந்திய ஏ அணி கேப்டன் ஜிதேஷ்
புதுடில்லி: வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 'டி-20' தொடர் கத்தாரின் தோஹாவில் வரும் நவ. 14-23ல் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (நவ. 21) முன்னேறும். பைனல் நவ. 23ல் நடக்க உள்ளது.இதற்கான இந்திய அணி கேப்டனாக, விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் சர்மா நியமிக்கப்பட்டார். துணைக்கேப்டனாக நமன் திர் தேர்வு செய்யப்பட்டார். 15 பேர் கொண்ட இந்திய அணியில் 14 வயது வீரர் வைபவ், டில்லி பிரிமியர் தொடரில் 475 ரன் எடுத்து அசத்திய பிரியான்ஷ் ஆர்யா, யாஷ் தாகூர் உள்ளிட்டோரும் இடம் பெற்றனர். இந்திய அணி தனது முதல் போட்டியில் நவ. 14ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை சந்திக்க உள்ளது.அணி விபரம்: ஜிதேஷ் சர்மா (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ், நேஹல் வதேரா, நமன் திர், சூர்யான்ஷ், ராமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அஷுதோஷ், யாஷ் தாகூர், குர்ஜப்னீத் சிங், விஜய் குமார், யுத்விர் சிங், அபிஷேக் போரல், சுயாஷ் சர்மா