உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / லார்ட்சில் சாதிக்குமா இந்திய அணி * மூன்றாவது டெஸ்ட் இன்று துவக்கம்

லார்ட்சில் சாதிக்குமா இந்திய அணி * மூன்றாவது டெஸ்ட் இன்று துவக்கம்

லார்ட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று லார்ட்சில் துவங்குகிறது. இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை தொடரும் பட்சத்தில், தொடர்ந்து இரண்டாவது வெற்றி பெறலாம்.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்டில் எழுச்சி பெற்ற இந்திய அணி, 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது, இன்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இளம் வீரர்கள்ரோகித், கோலி, அஷ்வின், முகமது ஷமி என பல சீனியர்கள் இல்லாத நிலையில் சுப்மன் தலைமையில் இடம் பெற்ற இளம் வீரர்களிடம் போதிய அனுபவம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக முதல் இரு டெஸ்டில் பெரும்பாலான நேரங்களில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் தான் நீடித்தது. இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு, இந்தியா இமாலய இலக்கு (608 ரன்) இலக்கு நிர்ணயித்தது. இதனால், தனது வழக்கமான 'பாஸ் பால் ஸ்டைல்' (வேகமாக ரன் சேர்ப்பது) ஆட்டத்தை இங்கிலாந்து அணி மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.பேட்டிங் கவனம்பேட்டிங்கை பொறுத்தவரையில் துவக்கத்தில் ஜெய்ஸ்வால் (220 ரன்), ராகுல் 236) ஜோடி நம்பிக்கை தருகிறது. அடுத்து வரும் கருண் நாயர் (77) மட்டும் மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் உள்ளார். கேப்டன் சுப்மன் கில் இதுவரை 585 ரன் குவித்துள்ளது, இந்தியாவுக்கு பலம் சேர்க்கிறது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் (342), ஜடேஜாவும் (194) கைகொடுக்கின்றனர். எனினும் இம்முறை பவுலர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்டர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மாற்றம் எப்படிபவுலிங்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இன்று மீண்டும் அணிக்கு திரும்புகிறார். பும்ராவுடன் (5 விக்.,), சிராஜ் (9), 2வது டெஸ்டில் 10 விக்கெட் சாய்த்த ஆகாஷ் தீப் சிங் என மூவர் கூட்டணி எதிரணிக்கு தொல்லை தர வேண்டும். வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக நிதிஷ் குமார் தொடர்வார். சுழலில் வாஷிங்டன் சுந்தர் (1), ஜடேஜா (2) இடம் பெறுவர் என்பதால் பிரசித் கிருஷ்ணா இன்று வழிவிட வேண்டும்.ஸ்மித் அதிகம்இங்கிலாந்து அணிக்கு துவக்கத்தில் டக்கெட் (236 ரன்) உதவினாலும் இவரது 'பார்ட்னர்' கிராலே (88) ஏமாற்றம் தருகிறார். அடுத்து வரும் ஹாரி புரூக் (280), விக்கெட் கீப்பர் ஜமை ஸ்மித் (356) அதிக ரன் சேர்க்கின்றனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் (109), கேப்டன் ஸ்டோக்ஸ் (86 ரன், 6 விக்.,) என இரண்டு 'சீனியர்களும்' இதுவரை சோபிக்கவில்லை. இம்முறை மீண்டும் வர முயற்சிக்கலாம்.ஆர்ச்சர் வருகைஇங்கிலாந்து அணிக்காக முதல் இரு டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்க் (11 விக்.,). ஆனால் ரன்களை வாரி வழங்கியதால், டங்க் நீக்கப்பட்டு, ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக 2021ல் இந்தியாவுக்கு எதிராக (ஆமதாபாத்) விளையாடினார். தற்போது 4 ஆண்டுக்குப் பின் அணிக்கு திரும்பிய இவர், வோக்ஸ் (3), கார்சுடன் (6) சேர்ந்து இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி தருவார். சுழலில் சோயப் பஷிர் (8) உள்ளார். 3 வெற்றிலார்ட்சில் இந்திய அணி 19 டெஸ்டில் பங்கேற்றது. இதில் 3ல் மட்டும் வென்றது. 4 போட்டி 'டிரா' ஆனது. 12ல் தோற்றது.* கடைசியாக 2021 டெஸ்டில் இந்தியா (364, 298/8), இங்கிலாந்தை (391, 120) 151 ரன்னில் வென்றது. சிராஜ் 8, பும்ரா 3 விக்கெட் சாய்த்தனர்.மாறிய ஆடுகளம்பேட்டிற்கிற்கு சாதகமான முதல் இரு டெஸ்டில் இந்திய அணியினர் ரன் குவிப்பை வெளிப்படுத்திய இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்தனர். இம்முறை லார்ட்ஸ் ஆடுகளத்தில் புற்கள் அதிகம் காணப்படுகிறது. இதனால் 'வேகங்களுக்கு' கைகொடுக்கும் எனத் தெரிகிறது.மழை வருமாலண்டனில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள், வானம் பெரும்பாலும் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பில்லை.யாருக்கு இடம்ரிஷாப் பன்ட் கூறுகையில்,'' இந்திய அணியில் இடம் பெறும் 11 பேர் யார் என இன்னும் முடிவு செய்யவில்லை. ஏனெனில் ஆடுகளத்தில் அடுத்த இரு நாளில் மாற்றம் வரலாம். இதற்கேற்ப 3 'வேகம்', 2 'சுழல்' அல்லது 3 'வேகம்', 1 'சுழல்' என அணித் தேர்வு இருக்கும். இதுகுறித்து ஆலோசனை நடக்கிறது,'' என்றார்.சேவக்கை முந்துவாராடெஸ்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்களில் சேவக் (103 போட்டி, 90 சிக்சர்), ரோகித் (67ல் 88) முதல் இரு இடத்தில் உள்ளனர். ரிஷாப் பன்ட் இதுவரை 45 டெஸ்டில் 86 சிக்சர் அடித்துள்ளார். லார்ட்சில் ரிஷாப் 5 சிக்சர் அடித்தால், சேவக்கை முந்தி 'நம்பர்-1' ஆகலாம்.585 ரன்சுப்மன் கில் இதுவரை 2 டெஸ்டில் 585 ரன் குவித்துள்ளார். இன்னும் 18 ரன் எடுத்தால், டிராவிட்டை (602 ரன்) பின்தள்ளி, இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் ஆகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை