உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / 455 ரன் குவித்தது தமிழகம் * ரஞ்சி கோப்பை லீக் போட்டியில்...

455 ரன் குவித்தது தமிழகம் * ரஞ்சி கோப்பை லீக் போட்டியில்...

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் முதல் இன்னிங்சில் தமிழக அணி 455 ரன் குவித்தது. கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'எலைட் ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், உ.பி., அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 282/5 ரன் எடுத்திருந்தது. இந்திரஜித் (128) அவுட்டாகாமல் இருந்தார்.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திரஜித் 149 ரன் எடுத்து அவுட்டானார். அஜிதேஷ் 86 ரன் எடுத்து கைகொடுத்தார். சோனு தன் பங்கிற்கு 44 ரன் எடுக்க, தமிழக அணி முதல் இன்னிங்சில் 455 ரன் குவித்து ஆல் அவுட்டானது. உ.பி., வீரர் கார்த்திக் 5 விக்கெட் சாய்த்தார். அடுத்து களமிறங்கிய உ.பி., அணி இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 87/1 ரன் எடுத்து, 368 ரன் பின்தங்கி இருந்தது. மும்பை வான்கடேயில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 630/5 ரன் குவித்து 'டிக்ளேர்' செய்தது. ஆகாஷ் ஆனந்த் (107) அவுட்டாகாமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய புதுச்சேரி அணி, 2வது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 43/4 ரன் எடுத்து திணறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ