உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அரையிறுதியில் மும்பை அணி * ரகானே அரைசதம் விளாசல்

அரையிறுதியில் மும்பை அணி * ரகானே அரைசதம் விளாசல்

ஆலுர்: சையது முஷ்தாக் அலி டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை.இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடர் நடக்கிறது. நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. கர்நாடகாவில் நடந்த போட்டியில் மும்பை, விதர்பா மோதின. 'டாஸ்' வென்ற மும்பை, பீல்டிங் தேர்வு செய்தது. விதர்பா அணிக்கு அதர்வா (66), கருண் நாயர் (26) ஜோடி துவக்கம் தந்தது. அபூர்வ் 51, சுபம் துபே 43 ரன் எடுத்தனர். விதர்பா அணி 20 ஓவரில் 221/6 ரன் குவித்தது.அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா (49), ரகானே (84) ஜோடி ரன் மழை பொழிந்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் (5), சூர்யகுமார் யாதவ் (9) கைவிட்டனர். பின் வந்த ஷிவம் துபே (37), சூர்யான்ஷ் (36) விளாச, மும்பை அணி 19.2 ஓவரில் 224/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.மற்ற காலிறுதி போட்டிகளில் மத்திய பிரதேச அணி (174/4), சவுராஷ்டிராவை (173/7) வென்றது. பரோடா அணி (172/7), பெங்காலை (131/10) சாய்த்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ