எளிதாக வென்றது தமிழகம் * 88 ரன் விளாசினார் ஜெகதீசன்
இந்துார்: சையது முஷ்தாக் போட்டியில் தமிழக அணி 134 ரன் வித்தியாசத்தில் சிக்கிமை வென்றது. இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடர் நடக்கிறது. இந்துாரில் நடந்த போட்டியில் தமிழகம், சிக்கிம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தமிழகம் பேட்டிங் தேர்வு செய்தார். தமிழக அணிக்கு பாபா இந்திரஜித் (33), ஜெகதீசன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பூபதி (36) சற்று உதவ, சிறப்பாக செயல்பட்ட ஜெகதீசன் 88 ரன் குவித்தார். ரித்திக் 33 ரன் எடுத்தார். தமிழக அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய சிக்கிம் அணிக்கு தமிழக பவுலர்கள் 'செக்' வைத்தனர். ஆஷிஷ் தபா (20), அன்வேஷ் (10), அன்குர் மாலிக் (28) தவிர மற்றவர்கள் ஏமாற்றினர். சிக்கிம் அணி 20 ஓவரில் 84/7 ரன் மட்டும் எடுத்து, தோல்வியடைந்தது. 134 ரன்தமிழக அணி நேற்று 134 ரன்னில் வென்றது. 'டி-20' கிரிக்கெட்டில் ரன் அடிப்படையில் தமிழக அணியின் சிறந்த வெற்றியாக இது அமைந்தது. முன்னதாக விதர்பா அணிக்கு எதிராக 113 ரன்னில் வென்று இருந்தது.57 விக்கெட்தமிழக 'டி-20' அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் முருகன் அஷ்வினை (55) முந்தி, முதலிடம் பிடித்தார் சாய் கிஷோர் (57 விக்.,).