மேலும் செய்திகள்
ரஞ்சி: மும்பை அணி முன்னிலை
07-Feb-2026
லக்னோ: ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கர்நாடகா அணி கேப்டன் தேவ்தத் படிக்கல் இரட்டை சதம் விளாசினார்.லக்னோவில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் கர்நாடகா, உத்தரகாண்ட் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில், கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 355/2 ரன் எடுத்திருந்தது. படிக்கல் (148), கருண் (37) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. கர்நாடகா அணிக்கு கருண் நாயர் அரைசதம் கடந்து கைகொடுத்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 129 ரன் சேர்த்த போது கருண் (60) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய கேப்டன் தேவ்தத் படிக்கல், முதல் தர போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இவர், 232 ரன்னில் (3x6, 29x4) ஆட்டமிழந்தார்.பின் இணைந்த ரவிச்சந்திரன் ஸ்மரன், கிருத்திக் கிருஷ்ணா ஜோடி கைகொடுத்தது. கிருஷ்ணா அரைசதம் விளாசினார். ஆறாவது விக்கெட்டுக்கு 123 ரன் சேர்த்த போது கிருஷ்ணா (60) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஸ்மரன், தன்பங்கிற்கு சதம் அடித்தார்.ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 689 ரன் எடுத்திருந்தது. ஸ்மரன் (121), வித்யாதர் பாட்டீல் (35) அவுட்டாகாமல் இருந்தனர். உத்தரகாண்ட் அணி சார்பில் ஆதித்யா ரவாத் 3 விக்கெட் வீழ்த்தினார்.பெங்கால் அபாரம்மேற்கு வங்கத்தின் கல்யாணியில் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் சுதிப் குமார் கராமி (146) சதம் கடந்து கைகொடுக்க, பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 328 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஜம்மு காஷ்மீர் அணி, ஆட்டநேர முடிவில் 198/5 ரன் எடுத்திருந்தது. கேப்டன் பராஸ் தோக்ரா (58), அப்துல் சமத் (82) அரைசதம் கடந்தனர். பெங்கால் சார்பில் முகமது ஷமி 3, முகேஷ் குமார் 2 விக்கெட் சாய்த்தனர்.
07-Feb-2026