உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / எமிரேட்ஸ் அணி தகுதி: டி-20 உலக கோப்பைக்கு

எமிரேட்ஸ் அணி தகுதி: டி-20 உலக கோப்பைக்கு

அல் அமராட்: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணி தகுதி பெற்றது.இந்தியா, இலங்கையில், 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (2026, பிப். 7 - மார்ச் 9) நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 8 இடங்களுக்கு தகுதிச் சுற்று நடந்தது. ஓமனில், ஆசியா-கிழக்கு ஆசியா அணிகளுக்கான தகுதிச் சுற்று நடந்தது. இதன் 'சூப்பர்-6' போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி (118/2, 12.1 ஓவர்) 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை (116/9, 20 ஓவர்) வீழ்த்தியது. ஐந்து போட்டியில், 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 'டாப்-3' இடத்தை உறுதி செய்த யு.ஏ.இ., அணி, உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்ற கடைசி அணியானது. ஏற்கனவே நேபாளம் (8 புள்ளி), ஓமன் (6) அணிகளும் தகுதி பெற்றன.உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த தகுதிச் சுற்றின் மூலம் கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே அணிகளும் உலக கோப்பைக்கு தகுதி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ