மேலும் செய்திகள்
இங்கிலாந்து அபார பந்துவீச்சு: இலங்கை அணி 236 ரன்
21-Aug-2024
லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் அசத்த, இலங்கை அணி ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது.இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. ஜோ ரூட் (143) கைகொடுக்க முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 358/7 ரன் எடுத்திருந்தது. அட்கின்சன் (74), பாட்ஸ் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் லிகிரு குமாரா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அட்கின்சன், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்த போது மாத்யூ பாட்ஸ் (21) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய அட்கின்சன், 118 ரன்னில் ஆட்டமிழந்தார்.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சோயிப் பஷீர் (7) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட் சாய்த்தார்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்கா (7), திமுத் கருணாரத்னே (7) ஏமாற்றினர். பதும் நிசங்கா (12), மாத்யூஸ் (22), சண்டிமால் (22) சோபிக்கவில்லை.தேநீர் இடைவேளையின் போது இலங்கை அணி முதல் இன்னிங்சில் 124/7 ரன் எடுத்திருந்தது. கமிந்து மெண்டிஸ் (22) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் வோக்ஸ், ஸ்டோன், பாட்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
21-Aug-2024