உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஹாரி புரூக் சதம்: மீண்டது இங்கிலாந்து

ஹாரி புரூக் சதம்: மீண்டது இங்கிலாந்து

கிறைஸ்ட்சர்ச்: முதல் டெஸ்டில் ஹாரி புரூக் சதம் கடந்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 319/8 ரன் எடுத்திருந்தது. பிலிப்ஸ் (41), சவுத்தீ (10) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் டிம் சவுத்தீ (15) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய பிலிப்ஸ் அரைசதம் கடந்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பிலிப்ஸ் (58) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ், சோயப் பஷிர் தலா 4 விக்கெட் சாய்த்தனர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே (0), ஜேக்கப் பெத்தெல் (10), ஜோ ரூட் (0) ஏமாற்றினர். பென் டக்கெட் (46) ஓரளவு கைகொடுத்தார். இங்கிலாந்து அணி 71 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த ஹாரி புரூக், போப் ஜோடி நம்பிக்கை தந்தது. புரூக் சதம் கடந்தார். போப் அரைசதம் விளாசினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 151 ரன் சேர்த்த போது சவுத்தீ 'வேகத்தில்' போப் (77) வெளியேறினார்.ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 319 ரன் எடுத்திருந்தது. புரூக் (132), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (32) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் நாதன் ஸ்மித் 2 விக்கெட் வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை