உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சிக்சர் அடித்தால் அவுட் * இங்கிலாந்து கிரிக்கெட்டில் வினோதம்

சிக்சர் அடித்தால் அவுட் * இங்கிலாந்து கிரிக்கெட்டில் வினோதம்

சவுத்விக்: இங்கிலாந்தின் கிளப் வீரர்கள் சிக்சர் அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் உள்ள சவுத்விக், ஷோர்ஹாம் கிரிக்கெட் கிளப் மைதானம், அளவில் சிறியது. மைதானத்துக்கு அருகில் வீடுகள், கார் பார்க்கிங் பகுதிகள் உள்ளன. போட்டிகளின் போது வீரர்கள் சிக்சர் அடித்தால், வீடுகளின் ஜன்னல், கார் கண்ணாடிகளை பதம் பார்க்கிறது. தவிர பார்வையாளர்கள் அடிக்கடி காயம் அடைகின்றனர்.இதை தடுக்க, மைதானத்தை சுற்றி வலை அமைக்கப்பட்ட போதும், பொருட்சேதத்தை தவிர்க்க முடியவில்லை. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக, வித்தியாசமான விதி கொண்டு வரப்பட்டது. இதன் படி, இம்மைதானத்தில் விளையாடும் போது வீரர்கள் சிக்சர் அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, தவறுதலாக முதன் முறையாக சிக்சர் அடித்தால், ரன் கொடுக்கப்படாது. மீண்டும் சிக்சர் அடித்தால், அந்த வீரர் 'அவுட்' என அறிவிக்கப்படுவார்.சவுத்விக் அணி பொருளாளர் மார்க் புரோக்ஸ்அப் கூறுகையில்,''ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் மந்தமாக இருந்தது. 'டி-20' வருகைக்குப் பின் வீரர்கள் விளாசுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை