உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / காயத்தை நினைத்தேன் நித்தம் தவித்தேன்: பாண்ட்யா சோக நினைவுகள்

காயத்தை நினைத்தேன் நித்தம் தவித்தேன்: பாண்ட்யா சோக நினைவுகள்

மும்பை: ''உலக கோப்பை தொடரில் எனது கணுக்காலில் ஏற்பட்ட காயம் வினையாக அமைந்தது,'' என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.இந்தியாவில் கடந்த ஆண்டு உலக கோப்பை தொடர்(50 ஓவர்) நடந்தது. இதில், வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் பந்தை தடுக்க முயன்ற இந்திய 'ஆல்--ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யாவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீள முடியாத இவர், எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இது குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியது: உலக கோப்பை தொடருக்காக ஒரு ஆண்டுக்கு முன்பாகவே பயிற்சியை துவக்கினேன். சொந்த மண்ணில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். கணுக்காலில் ஏற்பட்ட காயம், என் கனவுக்கு வேட்டு வைத்தது. ஆரம்பத்தில் 5 நாளில் தேறிவிடுவேன் என நம்பினேன். விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக, வலி நிவாரண ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டேன். கணுக்கால் வீங்கியது. இப்பகுதியில் இருந்த ரத்தத்தை அகற்றினர். ஒரு சதவீத வாய்ப்பு கிடைத்தாலும், அணிக்காக பங்கேற்க ஆர்வமாக இருந்தேன். அப்போது என்னால் நடக்கக் கூட முடியவில்லை. ஆனால், ஓட முயற்சி செய்தேன். கொஞ்சம் வித்தியாசமான காயம் என்பதால், தேறுவதற்கு 25 நாள் தேவைப்பட்டது.நாட்டுக்காக விளையாடுவதை பெரிய கவுரவமாக கருதுவேன். உலக கோப்பையை எனது குழந்தை போல நினைத்தேன். கடைசியில் எனது எண்ணங்கள் எல்லாம் தகர்ந்தன. உலக கோப்பை தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாத சோகம், என் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்கும். வரும் ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி கேப்டனாக சாதிக்க காத்திருக்கிறேன்.இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை