உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா ஏ அணி வெற்றி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது

இந்தியா ஏ அணி வெற்றி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது

பெங்களூரு: முதல் டெஸ்டில் கேப்டன் ரிஷாப் பன்ட் 90 ரன் விளாச, இந்தியா 'ஏ' அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா 'ஏ' அணியை வீழ்த்தியது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் (நான்கு நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 'ஏ' 309, இந்தியா 'ஏ' 234 ரன் எடுத்தன. தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி 2வஇ இன்னிங்சில் 199 ரன் எடுத்தது. பின், 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 'ஏ' அணி, 3ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 119/4 ரன் எடுத்திருந்தது. பன்ட் (64) அவுட்டாகாமல் இருந்தார்.நான்காம் நாள் ஆட்டத்தில் 4வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது கேப்டன் ரிஷாப் பன்ட் (90) அவுட்டானார். ஆயுஷ் படோனி (34), தனுஷ் (23) ஓரளவு கைகொடுத்தனர். பின் இணைந்த மானவ் சுதார் (20*), அன்ஷுல் கம்போஜ் (37*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 277/7 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை தனுஷ் (8 விக்.,) வென்றார். இந்தியா 'ஏ' அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட், நவ. 6ல் பெங்களூருவில் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை