உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தொடரை வென்றது இந்தியா ஏ: தென் ஆப்ரிக்கா ஏ அணி ஏமாற்றம்

தொடரை வென்றது இந்தியா ஏ: தென் ஆப்ரிக்கா ஏ அணி ஏமாற்றம்

ராஜ்கோட்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் ருதுராஜ் அரைசதம் விளாச, இந்தியா 'ஏ' அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா 'ஏ' அணியை வீழ்த்தியது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி, 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 'ஏ' அணியுடன் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி 30.3 ஓவரில் 132 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தென் ஆப்ரிக்கா 'ஏ' அணிக்கு ரிவால்டோ மூன்சாமி (33), டெலானோ (23), டயான் பாரெஸ்டர் (22), லுவான்-டிரே பிரிட்டோரியஸ் (21) ஆறுதல் தந்தனர். இந்தியா 'ஏ' அணி சார்பில் நிஷாந்த் சாந்து 4, ஹர்ஷித் ராணா 3, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் சாய்த்தனர்.சுலப இலக்கை விரட்டிய இந்தியா 'ஏ' அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது அபிஷேக் (32) அவுட்டானார். அபாரமாக ஆடிய ருதுராஜ் அரைசதம் கடந்தார். இந்தியா 'ஏ' அணி 27.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் (68), கேப்டன் திலக் வர்மா (29) அவுட்டாகாமல் இருந்தனர்.இந்தியா 'ஏ' அணி 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை நிஷாந்த் சாந்து வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ