உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சிறந்த வீரர் பும்ரா * ஐ.சி.சி.., விருது

சிறந்த வீரர் பும்ரா * ஐ.சி.சி.., விருது

துபாய்: டிசம்பர் மாதத்தின் ஐ.சி.சி., சிறந்த வீரராக இந்தியாவின் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாத விருது பரிந்துரை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 31, ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் (3 டெஸ்ட், 17 விக்.,), தென் ஆப்ரிக்காவின் பேட்டர்சன் (2 டெஸ்ட், 13 விக்.,) என மூன்று வீரர்கள் இடம் பெற்றனர்.உலக ரசிகர்கள், ஐ.சி.சி., ஹால் ஆப் பேம் விருது பெற்ற வீரர்கள் அடங்கிய குழு, முன்னாள் வீரர்கள், மீடியா உறுப்பினர்கள் ஓட்டு அளித்தனர். முடிவில் டிசம்பர் மாத சிறந்த வீரராக பும்ரா தேர்வானார். இவர், டிசம்பர் மாதம் நடந்த 3 டெஸ்டில் 22 விக்கெட் சாய்த்தார். தவிர மொத்தம் 5 டெஸ்டில் 32 விக்கெட் வீழ்த்தினார்.சிறந்த வீராங்கனை பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்ரிக்காவின் மிலபாவை பின் தள்ளிய, ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் சதர்லாந்து, விருதை தட்டிச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை