உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய வீரர்கள் பீல்டிங் பயிற்சி: பெர்த் டெஸ்டில் சாதிக்க

இந்திய வீரர்கள் பீல்டிங் பயிற்சி: பெர்த் டெஸ்டில் சாதிக்க

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சாதிக்க இந்திய வீரர்கள் 'பீல்டிங்' பயிற்சி மேற்கொண்டனர்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை பெர்த்தில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணியினர் பெர்த்தில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். 'பீல்டிங்' பயிற்சியாளர் திலிப் முன்னிலையில் இந்திய வீரர்கள் இரு பிரிவுகளாக பயிற்சி மேற்கொண்டனர். இதில் 'ரன்-அவுட்' வாய்ப்புகளை வீணடிக்காமல் இருக்க பவுண்டரி பகுதியில் இருந்து பந்தை 'ஸ்டம்சை' நோக்கி குறிபார்த்து எறிந்து பயிற்சி செய்தனர். பின், பந்தை மேலே துாக்கி அடித்து 'கேட்ச்' பயிற்சியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து 'பீல்டிங்' பயிற்சியாளர் திலிப் கூறுகையில், ''டெஸ்ட் தொடருக்கு இந்திய வீரர்கள் சிறப்பான முறையில் தயாராகி உள்ளனர். 'பீல்டிங்' பயிற்சியை, ஒரு போட்டி போல நடத்தியதால் வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். தவிர, ஒவ்வொரு வீரரும், தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அனைவரும் சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்டனர்,'' என்றார்.

யாஷ் தயாள் தேர்வு

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் மாற்று வீரராக வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது தேர்வு செய்யப்பட்டிருந்தார். வலைப்பயிற்சியில் போது இவருக்கு காயம் ஏற்பட்டதால், உடனடியாக நாடு திரும்பினார். இவருக்கு மாற்றாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டி-20' தொடருக்கு தேர்வான இவர், ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. அங்குள்ள ஜோகனஸ்பர்க்கில் இருந்து, இவர் பெர்த் வந்தடைந்தார்.அஷ்வினுக்கு இடம்பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் இந்திய 'லெவன்' அணியில் அஷ்வின்/ரவிந்திர ஜடேஜா என ஒரு சுழற்பந்துவீச்சாளருக்கு மட்டும் இடம் கிடைக்கும். ஆஸ்திரேலிய அணியில் இடது கை பேட்டர் அதிகம் இருப்பதால், அஷ்வின் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது.ஹேசல்வுட் மகிழ்ச்சிஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் கூறுகையில், ''இந்திய அணியில் புஜாரா இல்லாதது மகிழ்ச்சி. போட்டியில் நீண்ட நேரம் 'பேட்' செய்யும் திறமை கொண்ட இவர், பவுலர்களை சோர்வாக்கிவிடுவார். புஜாரா இல்லை என்பதால் இந்திய அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்திய அணியில் திறமையான இளம் வீரர்கள், நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதால் ஆஸ்திரேலிய பவுலர்கள் கவனமுடன் விளையாட வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ