மேலும் செய்திகள்
ஸ்மிருதி மந்தனா நம்பர்-1 * ஐ.சி.சி., தரவரிசையில்...
1 hour(s) ago
இளம் இந்தியா முன்னிலை
1 hour(s) ago
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் * இந்திய தொடருக்காக...
1 hour(s) ago
பிரிட்ஸ் சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்
06-Oct-2025
சென்னை: சென்னை டெஸ்டில் இந்தியாவின் ஸ்னே ராணா 'சுழலில்' சிக்கிய தென் ஆப்ரிக்க பெண்கள் அணி 'பாலோ-ஆன்' பெற்றது.இந்தியா, தென் ஆப்ரிக்க பெண்கள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 603/6 ('டிக்ளேர்') ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 236/4 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்னே ராணா தொல்லை தந்தார். இவரது 'சுழலில்' மரிசான் காப் (74), சினோலா ஜப்தா (0), நாடின் டி கிளார்க் (39) சிக்கினர். தொடர்ந்து அசத்திய இவரது பந்தில் மசபதா கிளாஸ் (1), மிலாபா (2) போல்டாகினர். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 266 ரன்னுக்கு சுருண்டு 'பாலோ-ஆன்' பெற்றது. இந்தியா சார்பில் ஸ்னே ராணா 8 விக்கெட் சாய்த்தார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு போஷ் (9) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய சுனே லுாஸ் (109) சதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய கேப்டன் லாரா வோல்வார்ட் அரைசதம் விளாசினார். மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 232 ரன் எடுத்து, 105 ரன் பின்தங்கி இருந்தது. வோல்வார்ட் (93), மரிசான் காப் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் தீப்தி, ஹர்மன்பிரீத் கவுர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.இப்போட்டி 'டிரா'வில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் ஸ்னே ராணா (8/77), டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் 8 விக்கெட் சாய்த்த 3வது வீராங்கனையானார். ஏற்கனவே இந்தியாவின் நீத்து டேவிட் (8/53, எதிர்: இங்கிலாந்து, 1995, இடம்: ஜாம்ஷெட்பூர்), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் (8/66, எதிர்: இங்கிலாந்து, 2023, இடம்: நாட்டிங்காம்) தலா 8 விக்கெட் கைப்பற்றினர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
06-Oct-2025