உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பிஷ்னோய் மேஜிக்: இந்தியா கலக்கல் * தொடரை இழந்தது இலங்கை

பிஷ்னோய் மேஜிக்: இந்தியா கலக்கல் * தொடரை இழந்தது இலங்கை

பல்லேகெலே: இரண்டாவது 'டி-20' போட்டியில் இந்திய அணி, 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. 2வது போட்டி நேற்று பல்கேகெலேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பீல்டிங் தேர்வு செய்தார். மழை காரணமாக 40 நிமிடம் போட்டி தாமதமாகத் துவங்கியது. பிஷ்னோய் அபாரம்இலங்கை அணிக்கு நிசங்கா (32), குசல் மெண்டிஸ் (10) ஜோடி துவக்கம் தந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய 16 வது ஓவரில் கமிந்து (26), பெரேரா (53) அவுட்டாகினர். மறுபக்கம் 17வது ஓவரை வீசிய பிஷ்னோய், ஷானகா (0), ஹசரங்காவை (0) வெளியேற்றினார். கேப்டன் சரித் அசலங்கா (14), அர்ஷ்தீப் 'வேகத்தில்' வீழ்ந்தார். அக்சர் படேல் வீசிய கடைசி ஓவரில் தீக்சனா (2), மெண்டிஸ் (12) அவுட்டாகினர். கடைசி 31 ரன் எடுப்பதற்குள், 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 20 ஓவரில் 161/9 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் பிஷ்னோய் 3, அர்ஷ்தீப், அக்சர், பாண்ட்யா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.'மின்னல்' வெற்றிஇந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், சாம்சன் ஜோடி துவக்கம் கொடுத்தது. 3 பந்தில் 6 ரன் எடுத்த போது மழையால் போட்டி தடைபட்டது. மீண்டும் ஆட்டம் துவங்கியது. இந்தியா, 8 ஓவரில் 78 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. சாம்சன் சந்தித்த முதல் பந்தில் 'டக்' அவுட்டானார். சூர்யகுமார் வந்த வேகத்தில் தீக்சனா ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். அடுத்து பதிரானா பந்தில் சிக்சர் அடித்த இவர், 26 ரன்னில் அவுட்டானார்.ஹசரங்கா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜெய்ஸ்வால் (30), அவரிடமே சிக்கினார். பதிரானா ஓவரில் பாண்ட்யா தொடர்ந்து இரு பவுண்டரி விளாச, இந்திய அணி 6.3 ஓவரில் 81/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாண்ட்யா (22), ரிஷாப் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை