உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஐ.பி.எல்., ஜாக்பாட் யாருக்கு: வீரர்கள் மெகா ஏலத்தில்

ஐ.பி.எல்., ஜாக்பாட் யாருக்கு: வீரர்கள் மெகா ஏலத்தில்

ஜெட்டா: ஐ.பி.எல்., வீரர்கள் 'மெகா' ஏலம் இன்று நடக்கிறது. இதில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட் அதிக விலைக்கு ஒப்பந்தமாகலாம்.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2008 முதல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி--20' தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை 17 சீசன் முடிந்துள்ளன. இதன் 18வது சீசன், அடுத்த ஆண்டு மார்ச் 14ல் துவங்குகிறது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம் இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடக்கிறது.சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. பத்து அணிகள் சார்பில் 46 பேர் தக்கவைக்கப்பட்டனர். அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 6 வீரர்களை தக்கவைத்தது. சென்னை, கோல்கட்டா, மும்பை, லக்னோ, ஐதராபாத், குஜராத் அணிகள் தலா 5, டில்லி 4, பெங்களூரு 3, பஞ்சாப் 2 வீரர்களை தக்கவைத்தன. இவர்களுக்கு ரூ. 558.5 கோடி செலவிடப்பட்டது.இம்முறை 577 பேர் ஏலத்தில் வருகின்றனர். இவர்களில், 204 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்காக ரூ. 641.5 கோடி செலவிடப்பட உள்ளது. இரண்டு வீரர்களை மட்டும் தக்கவைத்த பஞ்சாப் அணி, அதிகபட்சமாக ரூ. 110.50 கோடி வரை வீரர்களை வாங்கலாம். பெங்களூரு (ரூ. 83 கோடி), டில்லி (ரூ. 73 கோடி), குஜராத் (ரூ. 69 கோடி), லக்னோ (ரூ. 69 கோடி), சென்னை (ரூ. 65 கோடி), கோல்கட்டா (ரூ. 51 கோடி), மும்பை (ரூ. 45 கோடி), ஐதராபாத்துக்கு (ரூ. 45 கோடி) அணிகள் கையிருப்பாக வைத்துள்ளன. குறைந்த அளவாக ராஜஸ்தான் ரூ. 41 கோடி வைத்துள்ளது.பன்ட் வாய்ப்பு: ரிஷாப் பன்ட் (டில்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயாஸ் ஐயர் (கோல்கட்டா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர்கள் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதேபோல பெங்களூரு அணி கேப்டனாக இருந்த டுபிளசியும் விடுவிக்கப்பட்டார். இதில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட்டை வாங்க போட்டி நிலவலாம். அடிப்படை ஏலத்தொகை ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ள இவரை, ரூ. 20 கோடி வரை கொடுத்து ஒப்பந்தம் செய்யலாம்.சர்வதேச 'டி-20' போட்டியில் 96 விக்கெட் சாய்த்துள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை வாங்க பல்வேறு அணிகள் போட்டியிடலாம். பஞ்சாப் அணி விரும்பும் பட்சத்தில் 'ரைட் டு மேட்ச்' கார்டை பயன்படுத்தி இவரை அணியில் தக்கவைக்கலாம். இவர்களை தவிர ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷான், முகமது ஷமி, யுவேந்திர சகால், அவேஷ் கான், கலீல் அகமது, அஷ்வின் உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர்களை ஒப்பந்தம் செய்ய போட்டி நிலவலாம். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களை வாங்க போட்டி உண்டாகலாம்.81 வீரர்கள்வீரர்களுக்கான அடிப்படை ஏலத் தொகை, அதிகபட்சம் ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் 81 பேர் இடம் பெற்றுள்ளனர். அதன்பின் ரூ. 1.5 கோடிக்கு 27, ரூ. 1.25 கோடிக்கு 18, ரூ. ஒரு கோடிக்கு 23 பேர் ஏலத்தில் வரவுள்ளனர். இதேபோல ரூ. 75, 50, 40, 30 ஆயிரம் வீரர்களின் அடிப்படை ஏலத்தொகையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி