உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஐ.பி.எல்., வீரர்களுக்கு ஜாக்பாட் * பி.சி.சி.ஐ., புதிய முடிவு

ஐ.பி.எல்., வீரர்களுக்கு ஜாக்பாட் * பி.சி.சி.ஐ., புதிய முடிவு

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் 18 வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதம் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம், விடுவிக்கப்பட்ட வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுப்பது குறித்து முடிவெடுக்க, ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் படி ஒவ்வொரு அணியின் ஒட்டுமொத்த ஏலத்தொகை ரூ. 120 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டினை விட ரூ. 20 கோடி அதிகம். தவிர அணிகள் தலா 6 வீரர்களை தக்கவைக்கலாம், விடுவிக்கப்பட்ட வீரரை மீண்டும் வாங்கிக் கொள்ளும் வகையிலான 'ரைட் டு மேட்ச்' முறை நீடிக்க உள்ளது. எனினும் இதுகுறித்து இறுதி அறிவிப்பு வெளியாகவில்லை.போட்டிக்கு சம்பளம்பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா வெளியிட்ட செய்தியில்,'முதன் முறையாக ஐ.பி.எல்., போட்டி சம்பளம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் படி ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 7.5 லட்சம் தரப்படும். ஒரு சீசன் முழுவதும் களமிறங்கும் வீரருக்கு ரூ. 1.05 கோடி கிடைக்கும். இதற்காக ஒவ்வொரு அணியும் ரூ. 12.60 கோடி ஒதுக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார். இதனால், வீரர்கள் ஒப்பந்த தொகை தவிர, ஒரு போட்டியில் களமிறங்கினால், தனியாக ரூ. 7.5 லட்சம் சம்பளம் பெறவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ