முஷ்பிகுர் ரஹிம் ஓய்வு: ஒருநாள் போட்டியில் இருந்து
தாகா: வங்கதேசத்தின் முஷ்பிகுர், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.வங்கதேச விக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்பிகுர் ரஹிம் 37. கடந்த 2006ல் ஹராரேயில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக பங்கேற்றார். கடைசியாக, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் விளையாடினார். இத்தொடரில் வங்கதேச அணி லீக் சுற்றோடு திரும்பியது.இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக முஷ்பிகுர் ரஹிம், சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார். இவர், இதுவரை 274 ஒருநாள் போட்டியில் (7795 ரன், 9 சதம், 49 அரைசதம்) விளையாடி உள்ளார். ஏற்கனவே 'டி-20' போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், இனி டெஸ்டில் மட்டும் விளையாடுவார்.முஷ்பிகுர் வெளியிட்ட செய்தியில், ''ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். கடந்த 19 ஆண்டுகளாக ஆதரவு அளித்த சகவீரர்கள், ரசிகர்களுக்கு நன்றி,'' என தெரிவித்திருந்தார்.