உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது நியூசிலாந்து: முதல் டி-20 போட்டியில்

ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது நியூசிலாந்து: முதல் டி-20 போட்டியில்

மவுன்ட் மவுன்கனுய்: முதல் 'டி-20' போட்டியில் மிட்செல் மார்ஷ் அரைசதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மவுன்ட் மவுன்கனுயில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.ராபின்சன் சதம்: நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பெர்ட் (4), கான்வே (1), மார்க் சாப்மேன் (0) ஏமாற்றினர். டேரில் மிட்செல் (34), பெவோன் ஜேக்கப்ஸ் (20) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் மைக்கேல் பிராஸ்வெல் (7) 'ரன்-அவுட்' ஆனார். அபாரமாக ஆடிய டிம் ராபின்சன் (106* ரன், 66 பந்து, 5 சிக்சர், 6 பவுண்டரி), சர்வதேச 'டி-20' அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது.மார்ஷ் விளாசல்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (31), மேத்யூ ஷார்ட் (29) நம்பிக்கை தந்தனர். கேப்டன் மிட்செல் மார்ஷ் 43 பந்தில் 85 ரன் (5 சிக்சர், 9 பவுண்டரி) விளாசினார். பின் இணைந்த டிம் டேவிட் (21*), ஸ்டாய்னிஸ் (4*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷ் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை