உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு கபில் தேவ் அட்வைஸ்

ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு கபில் தேவ் அட்வைஸ்

புதுடில்லி: ''இந்திய நட்சத்திரங்கள் தங்களது திறமைகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்த வேண்டும். இதனால் இந்தியா இரட்டை இலக்கில் பதக்கம் வெல்ல முடியும் என நம்புகிறேன்,'' என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் 65. கடந்த 1983ல் இந்தியாவுக்கு முதன் முதலில் உலக கோப்பை வென்று தந்தார். தற்போது 'கோல்ப் டூர் ஆப் இந்தியா' அமைப்பின் தலைவராக உள்ளார்.பாரிஸ் ஒலிம்பிக் குறித்து கபில் தேவ் கூறியது:பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் வாழ்த்துகள். போட்டிகளில் துணிச்சலாக செயல்பட்டு, சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்துங்கள். அனைத்தும் சரியாக நடந்தால், டோக்கியோ (7 பதக்கம்) போட்டியை விட இம்முறை, இந்தியா அதிக பதக்கம் வெல்ல முடியும் என நம்புகிறேன்.முதன் முதலில் கிரிக்கெட் விளையாடிய போது, கோல்ப் விளையாட்டு இந்தளவுக்கு வளர்ச்சி அடையும் என நினைத்தது இல்லை. விரைவில் கிரிக்கெட் போல இப்போட்டியும் வளரும் என நம்புகிறேன்.இந்திய கிரிக்கெட் அணி புதிய பயிற்சியாளர் காம்பிருக்கு வாழ்த்துகள். முன்பு இருந்ததை விட, இந்திய அணியை சிறப்பான இடத்துக்கு காம்பிர் கொண்டு செல்வார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி