உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்: இரண்டாவது டெஸ்டில் அசத்தல்

இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்: இரண்டாவது டெஸ்டில் அசத்தல்

முல்தான்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அசத்திய பாகிஸ்தான் அணி 152 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் முல்தானில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 366, இங்கிலாந்து 291 ரன் எடுத்தன. பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 221 ரன் எடுத்தது. பின், 297 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3ம் நாள் முடிவில் 36/2 ரன் எடுத்திருந்தது.நான்காம் நாள் ஆட்டத்தில் சஜித் கான் பந்தில் போப் (22) அவுட்டானார். நோமன் அலி 'சுழலில்' ஜோ ரூட் (18), ஹாரி புரூக் (16) சிக்கினர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (37), பிரைடன் கார்ஸ் (27) ஆறுதல் தந்தனர். நோமன் அலி பந்தில் ஜேமி ஸ்மித் (6), ஜாக் லீச் (1), சோயப் பஷீர் (0) அவுட்டாகினர்.இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 144 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 8, சஜித் கான் 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை சஜித் கான் வென்றார். தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 20 விக்கெட்பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களான நோமன் அலி (3+8), சஜித் கான் (7+2), இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டெஸ்ட் வரலாற்றில், ஒரு போட்டியில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை இரு பவுலர்கள் மட்டும் சாய்த்தது 7வது முறையாக அரங்கேறியது. கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் (1972), ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி (2+8), பாப் மாஸி (8+2) 20 விக்கெட் வீழ்த்தினர்.1349 நாட்களுக்கு பின்...இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் 1349 நாட்களுக்கு பின் டெஸ்டில் வெற்றி பெற்றது. கடைசியாக 2021ல் (பிப். 4-8) ராவல்பிண்டியில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 95 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் சொந்த மண்ணில் பங்கேற்ற 11 டெஸ்டில் (4 'டிரா', 7 தோல்வி) ஒன்றில் கூட வென்றதில்லை. ஏற்கனவே 1969-1975ல், தொடர்ச்சியாக 11 டெஸ்டில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி ஏமாற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை