உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது பாகிஸ்தான்: முதல் டெஸ்டில் அசத்தல்

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது பாகிஸ்தான்: முதல் டெஸ்டில் அசத்தல்

முல்தான்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய பாகிஸ்தான் அணி 127 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் முல்தானில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 230, வெஸ்ட் இண்டீஸ் 137 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 109/3 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் சவுத் ஷகீல் (2), முகமது ரிஸ்வான் (2) உள்ளிட்டோர் ஏமாற்றினர். கம்ரான் குலாம் (27), சல்மான் ஆகா (14) ஆறுதல் தந்தனர். பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 157 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வெஸ்ட் இண்டீஸ் 'சுழல்' வீரர் ஜோமல் வாரிக்கன் 7 விக்கெட் சாய்த்தார்.பின், 251 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (12), மைக்கேல் லுாயிஸ் (13) ஏமாற்றினர். அலிக் அதானஸ் (55) அரைசதம் கடந்து கைகொடுத்தார்.மற்றவர்கள் ஏமாற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 123 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் 'சுழலில்' அசத்திய சஜித் கான் 5, அப்ரார் அகமது 4, நோமன் அலி ஒரு விக்கெட் கைப்பற்றினர். இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் (4+5) வீழ்த்திய பாகிஸ்தானின் சஜித் கான், ஆட்ட நாயகன் விருது வென்றார்.

20 விக்கெட்

முல்தான் டெஸ்டில் 'சுழலில்' ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தானின் சஜித் கான் (4+5), நோமன் அலி (5+1), அப்ரார் அகமது (1+4) கூட்டணி, வெஸ்ட் இண்டீசின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 3வது டெஸ்டில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் எதிரணியின் 20 விக்கெட்டுகளை தட்டிச் சென்றனர். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான முல்தான் (அக். 15-18), ராவல்பிண்டி (அக். 24-26) டெஸ்டில் பாகிஸ்தான் 'சுழல்' வீரர்கள் இப்படி சாதித்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை