பாகிஸ்தான் அணி அபாரம்: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது
புலவாயோ: முதல் 'டி-20' போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. புலவாயோ நகரில் முதல் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணிக்கு உஸ்மான் கான் (39), தயப் தாஹிர் (34*), சைம் அயூப் (24) கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி (33), கேப்டன் சிக்கந்தர் ராஜா (39) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற ஜிம்பாப்வே அணி 15.3 ஓவரில் 108 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3, ஹாரிஸ் ராப் 2 விக்கெட் சாய்த்தனர். பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை பெற்றது.