மேலும் செய்திகள்
மீண்டது வங்கதேசம் * ஷாத்மன், முஷ்பிகுர் அரைசதம்
23-Aug-2024
ராவல்பிண்டி: வங்கதேச பவுலர்கள் அசத்த, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன் மட்டும் எடுத்தது.பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.பாகிஸ்தான் அணியின் சைம் அயூப் (58), கேப்டன் ஷான் மசூது (57) அரைசதம் கடந்தனர். பாபர் ஆசம் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். சவுத் ஷகீல் (16), முகமது ரிஸ்வான் (29) நிலைக்கவில்லை. சல்மான் அஹா (54) அரைசதம் விளாசினார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5, டஸ்கின் அகமது 3 விக்கெட் சாய்த்தனர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது. ஷாத்மன் (6), ஜாகிர் ஹசன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
23-Aug-2024