பாகிஸ்தான் அணி தடுமாற்றம்: தென் ஆப்ரிக்கா அபாரம்
செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க பவுலர்கள் அசத்த, பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன் மட்டும் எடுத்தது.தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 211, தென் ஆப்ரிக்கா 301 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 88/3 ரன் எடுத்திருந்தது. பாபர் ஆசம் (16), ஷகீல் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக துவங்கியது. பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம் (50), சவுத் ஷகீல் (84) நம்பிக்கை தந்தனர். முகமது ரிஸ்வான் (3), சல்மான் ஆகா (1), நசீம் ஷா (0) ஏமாற்றினர். பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. குர்ரம் ஷாஜத் (9) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் மார்கோ யாசென் 6, ரபாடா 2 விக்கெட் சாய்த்தனர்.பின் 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சல் 27/3 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (22) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது அபாஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.