உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரகானே அரைசதம்: காலிறுதியில் லீசெஸ்டர்ஷயர்

ரகானே அரைசதம்: காலிறுதியில் லீசெஸ்டர்ஷயர்

பிரிஸ்டோல்: ஒருநாள் கோப்பை தொடரின் காலிறுதிக்கு லீசெஸ்டர்ஷயர் அணி முன்னேறியது. ரகானே அரைசதம் கடந்து கைகொடுக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வெற்றி பெற்றது.இங்கிலாந்தில், ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பிரிஸ்டோலில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் லீசெஸ்டர்ஷயர், குளோசெஸ்டர்ஷயர் அணிகள் மோதின. மழையால் தலா 36 ஓவர் போட்டியாக நடந்தது. 'டாஸ்' வென்ற லீசெஸ்டர்ஷயர் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.குளோசெஸ்டர்ஷயர் அணி 36 ஓவரில் 9 விக்கெட்டுககு 192 ரன் எடுத்தது. பின் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 36 ஓவரில் 196 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றப்பட்டது. அஜின்கியா ரகானே (62), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (65*) கைகொடுக்க, 33.4 ஓவரில் 199/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது.'பி' பிரிவில் 12 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த லீசெஸ்டர்ஷயர் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் ஹாம்ப்ஷயர் அணியை (ஆக. 16) எதிர்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி