உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரஞ்சி கோப்பை: தமிழக பவுலர்கள் தடுமாற்றம்

ரஞ்சி கோப்பை: தமிழக பவுலர்கள் தடுமாற்றம்

நாக்பூர்: தமிழக பவுலர்கள் தடுமாற, விதர்பா அணியின் கருண் நாயர் சதம் விளாசினார்.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. நாக்பூரில் நடக்கும் காலிறுதியில் விதர்பா, தமிழகம் அணிகள் விளையாடுகின்றன.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த விதர்பா அணிக்கு அதர்வா (0), ஆதித்யா தாக்கரே (5) ஏமாற்றினர். துருவ் ஷோரே (26) நிலைக்கவில்லை. பின் இணைந்த டேனிஷ், கருண் நாயர் ஜோடி நம்பிக்கை தந்தது. டேனிஷ் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த போது டேனிஷ் (75) அவுட்டானார்.யாஷ் ரத்தோட் (13), கேப்டன் அக்சய் வாட்கர் (24) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கருண் நாயர் சதம் அடித்தார். ஆட்டநேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. கருண் (100), ஹர்ஷ் துபே (19) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் விஜய் சங்கர் 2, முகமது, சோனு யாதவ், அஜித் ராம், முகமது அலி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.முலானி அபாரம்கோல்கட்டா, ஈடன் கார்டனில் நடக்கும் மற்றொரு காலிறுதியில் மும்பை, ஹரியானா அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் (9) ஏமாற்றினார். கேப்டன் ரகானே (31) ஆறுதல் தந்தார். பொறுப்பாக ஆடிய ஷாம்ஸ் முலானி (91), தனுஷ் (85*) அரைசதம் கடந்தனர். ஆட்டநேர முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 278/8 ரன் எடுத்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை