உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஸ்திரேலிய கேப்டனுக்கு ஓய்வு

ஆஸ்திரேலிய கேப்டனுக்கு ஓய்வு

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக, ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 8 வாரம் ஓய்வு எடுக்க உள்ளார்.ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 22-26ல் பெர்த்தில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.இந்திய அணி, கடைசியாக நடந்த 4 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' தொடரை (2016-17, 2018-19, 2020-21, 2022-23) வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபி வென்று தந்த கம்மின்ஸ், இத்தொடரை வென்று தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.இத்தொடருக்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்சிற்கு 7 முதல் 8 வாரம் ஓய்வு எடுக்க உள்ளார். கடந்த 18 மாதங்களாக தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் இவர், அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடக்கும் 3 'டி-20', 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கமாட்டார்.இதுகுறித்து கம்மின்ஸ் கூறுகையில், ''மிகப் பெரிய டெஸ்ட் தொடருக்கு முன் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கலாம். உடல், மனதளவில் வலிமை கிடைக்கும். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) ஆஸ்திரேலியாவுக்கு தங்கம் வென்று தர விரும்புகிறேன். ஆனால் அதற்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை