மேலும் செய்திகள்
பைனலில் இந்திய ஜோடி
27-Sep-2024
பெர்கெலே: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு ருடுஜா போசாலே ஜோடி முன்னேறியது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ருடுஜா போசாலே, போஸ்னியாவின் எமா பர்ஜிக் ஜோடி, அமெரிக்காவின் கயேட்டனோ, அயனா அக்லி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை கடும் போராட்டத்துக்குப் பின் ருடுஜா ஜோடி 7-5 என கைப்பற்றியது. அடுத்து நடந்த இரண்டாவது செட்டிலும் ருடுஜா ஜோடி 6-4 என அசத்தியது. ஒரு மணி நேரம், 46 நிமிடம நடந்த போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சஹாஜா, ஸ்பெயினின் அலிசியா ஜோடி, அமெரிக்காவின் மானசே, ஆஸ்திரேலியாவின் எலிசியா ஜோடியை சந்தித்தது. இதில் சஹாஜா ஜோடி 0-6, 6-4, 10-4 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது.
27-Sep-2024