உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தென் ஆப்ரிக்க அணி அசத்தல்: ரிக்கல்டன், பவுமா சதம் விளாசல்

தென் ஆப்ரிக்க அணி அசத்தல்: ரிக்கல்டன், பவுமா சதம் விளாசல்

கேப்டவுன்: பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் ரியான் ரிக்கல்டன், கேப்டன் பவுமா சதம் விளாசினர்.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் (17), வியான் முல்டர் (5), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (0) ஏமாற்றினர். தென் ஆப்ரிக்க அணி 72 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்த தடுமாறியது. பின் இணைந்த ரியான் ரிக்கல்டன், கேப்டன் டெம்பா பவுமா ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. ரிக்கல்டன், டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதம் விளாசினார். மறுமுனையில் அசத்திய பவுமா, தனது 4வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 235 ரன் சேர்த்த போது பவுமா (106) அவுட்டானார்.ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 316 ரன் எடுத்திருந்தது. ரிக்கல்டன் (176), பெடிங்காம் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை