மேலும் செய்திகள்
அயர்லாந்திடம் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா
30-Sep-2024
அபுதாபி: இரண்டாவது ஒருநாள் போட்டியில் 174 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, 2-0 என தொடரை கைப்பற்றியது.அபுதாபி சென்றுள்ள தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது.இரண்டாவது போட்டியில் 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் (40), கேப்டன் பாவுமா (35), வான் டெர் துசென் (35) நல்ல துவக்கம் கொடுத்தனர். கைல் வெர்ரின்னே (67), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (112*), வியான் முல்டர் (43) கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 343 ரன் எடுத்தது.கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி 30.3 ஓவரில் 169 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கிரெய்க் யங் (29*), கவின் ஹோய் (23), மார்க் அடைர் (21), கிரஹாம் ஹியூம் (21) ஆறுதல் தந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் லிசாட் வில்லியம்ஸ் 3 விக்கெட் சாய்த்தார்.
30-Sep-2024