தென் ஆப்ரிக்கா இமாலய வெற்றி: இலங்கை அணி ஏமாற்றம்
டர்பன்: முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி 233 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் டர்பனில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 191, இலங்கை 42 ரன் எடுத்தன. தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 366/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. பின், 516 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3ம் நாள் முடிவில் 103/5 ரன் எடுத்திருந்தது. நான்காவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு சண்டிமால் (83), கேப்டன் தனஞ்செயா டி சில்வா (59) ஜோடி நம்பிக்கை தந்தது. குசால் மெண்டிஸ் (48) ஓரளவு கைகொடுத்தார். இலங்கை அணி 2வது இன்னிங்சில் 282 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றது.தென் ஆப்ரிக்காவின் யான்சென் (7+4 விக்.,) ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இரண்டாவது இடம்
டர்பன் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்க அணி (வெற்றி சதவீதம் 59.26%), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-2025) புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா (57.69%) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்திய அணி (61.11%) முதலிடத்தில் நீடிக்கிறது.