உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பயிற்சியில் இந்திய வீரர்கள் * டி-20 உலக கோப்பை தொடரில் சாதிக்க

பயிற்சியில் இந்திய வீரர்கள் * டி-20 உலக கோப்பை தொடரில் சாதிக்க

நியூயார்க்: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் நேற்று அமெரிக்காவில் பயிற்சியை துவக்கினர்.வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் (ஜூன் 2-29) நடக்க உள்ளது. இதற்காக கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூயார்க் சென்றுள்ளது. ஜூன் 1ல் நியூயார்க்கில் நடக்கும் பயிற்சி போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோத உள்ளன. நாளை அமெரிக்கா செல்லவுள்ள கோலி, இப்போட்டியில் பங்கேற்பாரா என உறுதியாக தெரியவில்லை.பயிற்சி எப்படிஇந்திய அணி வீரர்கள் கடந்த இரு மாதங்களாக மின்னொளியில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றனர். உலக கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் லீக் போட்டிகள், அமெரிக்க நேரப்படி காலை 10:30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8:00 மணி) துவங்கும்.முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் சென்ற போது, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இந்திய அணியினர் விளையாடியுள்ளனர்.ஆனால் நியூயார்க்கில் இதுவரை விளையாடியது இல்லை. இனிமேல் தான் களமிறங்க உள்ளனர். தவிர இங்கு, காலையில் வீசும் காற்று பேட்டர்களுக்கு சவாலாக அமையும். இதனால் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு ஏற்ப தங்களை 'அட்ஜஸ்ட்' செய்து கொள்ளும் வகையில், இந்திய அணியினர் பகலில் பயிற்சியை துவக்கினர். அணியின் 14 வீரர்கள் லேசான 'ஜாக்கிங்', ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டனர்.ஜடேஜா கூறுகையில்,'' நியூயார்க்கில் முதன் முறையாக கிரிக்கெட் விளையாட உள்ளோம். இது வெற்றிகரமாக அமையும் என நம்புகிறோம். வானிலை சிறப்பாக உள்ளது,'' என்றார்.சூர்யகுமார் கூறுகையில்,'' அமெரிக்காவில் கிரிக்கெட் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக கோப்பை தொடரின் முதல் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,'' என்றார்.அட்டவணைஉலக கோப்பை தொடர் முதல் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. லீக் சுற்றில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும். இந்தியா மோதும் லீக் போட்டிகள் விபரம்:தேதி எதிரணி இடம் நேரம்ஜூன் 5 அயர்லாந்து நியூயார்க்ஜூன் 9 பாகிஸ்தான் நியூயார்க்ஜூன் 12 அமெரிக்கா நியூயார்க்ஜூன் 15 கனடா லாடர்ஹில்* போட்டி இரவு 8:00 மணிக்கு துவங்கும்.ஆஸி., வீரர்கள் பற்றாக்குறைபோர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி (123/3, 10 ஓவர்) 7 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை (119/9, 20 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் 9 பேர் மட்டுமே இருந்தனர். ஐ.பி.எல்., தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஓய்வில் உள்ளனர். வேறு வழியில்லாத நிலையில் தேர்வுக்குழு தலைவர் பெய்லி, தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக் டொனால்டு, இரு உதவி பயிற்சியாளர் என 4 பேர் ஆஸ்திரேலியா சார்பில் 'பீல்டிங்' செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மே 31, 2024 09:50

நான் ஒரு கிரிக்கெட் விளையாட்டு ரசிகன் எழுபதுகளில் இருந்து இன்றுவரை... அன்றைய பிசின் சிங்க் பேடி, பட்டோடி, சந்திரசேகர், ஸ்ரீகாந்த், சுனில் கவாஸ்கர், கபில்தேவ், அசாருதீன், கங்குலி, கோழி, டோனி வரை விளையாட்டை காண்பதற்கு வாய்ப்பு கிட்டியது. இன்றுவரை மகிழ்வுடன் உள்ளேன். நந்து முடிந்த ஐ பி எல் மட்ச்களில் இளைய தளியுறையினர் பேட்டிங்கில் அவசரம் அவசரம் என அடிக்கின்றனர். பௌலர்கள் ஸ்பின் செய்து போடுபவர்கள் பிட்சின் பாதிக்கும் குறைவாக போடுவதால் பந்து பேட்ஸ்மேன் தலை க்கு மேலாகவே செல்கிறது. இந்த குறையை நீக்கியாகவேண்டும். வைட் கொடுப்பதுபோல பிட்சின் பாதிக்கும் குறைவான இடத்தில் பந்து விழும்பட்சத்தில் ஒரு ரன் கொடுக்கலாம். பௌலர் ஒரு ஊரில் இரண்டு வைட் மேல் கொடுத்தால் அவரை பௌலிங் செய்வதில் இருந்து நிறுத்தலாம் ஐம்பது ஓவர் மாட்ச் சரி. டெஸ்ட் கிரிக்கெட் தேவை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை