| ADDED : ஜூன் 17, 2024 10:54 PM
கிராஸ் ஐஸ்லட்: இலங்கை அணி 83 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இலங்கை, நெதர்லாந்தை சந்தித்தது. இதில் வென்றால் 'சூப்பர்-8' வாய்ப்பு வரலாம் என்ற நிலையில் 'டாஸ்' வென்ற நெதர்லாந்து, பீல்டிங் தேர்வு செய்தது. மெண்டிஸ் விளாசல்இலங்கை அணிக்கு நிசங்கா (0), குசல் மெண்டிஸ் ஜோடி துவக்கம் தந்தது. கமிந்து 17 ரன் எடுக்க, தனஞ்செயா 34 ரன் எடுத்தார். மெண்டிஸ் 29 பந்தில் 46 ரன் எடுத்து உதவினார். அசலங்கா 21 பந்தில் 46 ரன் விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இலங்கை அணி 20 ஓவரில் 201/6 ரன் குவித்தது. மாத்யூஸ் (30), கேப்டன் ஹசரங்கா (20) அவுட்டாகாமல் இருந்தனர். தவிர 'டி-20' உலக வரலாற்றில் எந்த ஒரு வீரரும் அரைசதம் அடிக்காத போதும், அதிக ரன் எடுத்த அணியானது இலங்கை.துஷாரா 'மூன்று'கடின இலக்கைத் துரத்திய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் (31), மேக்ஸ் ஓ தவுத் (11) ஜோடி துவக்கம் தந்தது. விக்ரம்ஜித் (7), சைபராந்த் (11) ஏமாற்ற, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 31 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் அணியை கைவிட்டனர். நெதர்லாந்து அணி 16.4 ஓவரில் 118 ரன்னுக்கு சுருண்டது. துஷாரா 3 விக்கெட் சாய்த்தார். நெதர்லாந்து அணி வெளியேறியது.