உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அக்சர் அமர்க்களம்... குல்தீப் குதுாகலம் * பைனலில் நுழைந்தது இந்தியா

அக்சர் அமர்க்களம்... குல்தீப் குதுாகலம் * பைனலில் நுழைந்தது இந்தியா

கயானா: 'டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்தியா. சுழலில் அமர்க்களப்படுத்திய அக்சர், இங்கிலாந்தின் 'டாப் ஆர்டரை' தகர்க்க, குதுாகலம் அடைந்த குல்தீப், 'மிடில் ஆர்டரை' சாய்த்தார். இந்திய அணி 68 ரன்னில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று கயானாவில் நடந்த அரையிறுதியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஒரு மணி நேரம், 20 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், பீல்டிங் தேர்வு செய்தார். மழைக்குப் பின் ஆட்டம்இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, கோலி ஜோடி மீண்டும் சுமாரான துவக்கம் தந்தது. கோலி (9) மீண்டும் ஏமாற்றினார். ரிஷாப் (4) ஏமாற்றினார். இந்திய அணி 8 ஓவரில் 65/2 ரன் எடுத்த போது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம், 17 தாமதமாக மீண்டும் ஆட்டம் துவங்கியது. ரோகித் அரைசதம்கர்ரான் வீசிய 13வது ஓவரில் சிக்சர் அடித்த ரோகித், அரைசதம் கடந்தார். இதே ஓவரில் சூர்யகுமார், ஒரு சிக்சர், பவுண்டரி விளாச, 19 ரன் கிடைத்தன. ரஷித் சுழலில், ரோகித் (57) போல்டானார். சூர்யகுமார், 47 ரன் எடுத்து வீழ்ந்தார். ஆர்ச்சர் 18 வது ஓவரை வீசினார். இதன் முதல் 3 பந்தில் 2, 6, 6 என 14 ரன் எடுத்த பாண்ட்யா (23), 4வது பந்தில் அவுட்டானார். 5வது பந்தில் துபே 'டக்' அவுட்டானார். அக்சர் படேல் 10 ரன் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்தது. ஜடேஜா (17), அர்ஷ்தீப் (1) அவுட்டாகாமல் இருந்தனர். அக்சர் நம்பிக்கைஇங்கிலாந்து அணிக்கு பட்லர், பில் சால்ட் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. அக்சர் தனது முதல் ஓவரில் பட்லரை (23) அவுட்டாக்கினார். அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவை (0) போல்டாக்கிய அக்சர், மொயீன் அலியையும் (8) விட்டுவைக்கவில்லை. கர்ரான் (2), அபாயகரமான ஹாரி புரூக் (25) என இருவரையும் குல்தீப் வெளியேற்றினார். ஜோர்டான் (1), ரஷித் (2) என இருவரும் ரன் அவுட்டாகினர். கடைசியில் ஆர்ச்சர் (21) அவுட்டாக, இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் 103 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 68 ரன்னில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. மூன்றாவது முறை'டி-20' உலக கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது இந்தியா. முன்னதாக 2007ல் கோப்பை வென்றது. 2014ல் 2வது இடம் பெற்றது.50'டி-20' உலக கோப்பை தொடரில் 50 வது சிக்சர் அடித்தார் ரோகித். வெஸ்ட் இண்டீசின் கெய்ல், அதிகபட்சமாக 63 சிக்சர் அடித்துள்ளார். 200நேற்று 3 விக்கெட் சாய்த்த குல்தீப், 'டி-20' அரங்கில் 200 விக்கெட் (160 போட்டி) என்ற மைல்கல்லை எட்டினார். பதிலடிகடந்த 2022, 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா (168/6), 10 விக்கெட்டில் இங்கிலாந்திடம் (170/0) தோற்றது. நேற்றைய அரையிறுதியில் 68 ரன்னில் வெற்றி பெற்று, பதிலடி கொடுத்தது. தென் ஆப்ரிக்காவுடன் மோதல்'டி-20' உலக கோப்பை பைனல் நாளை பார்படாசில் நடக்க உள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.9'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் கோலி, 2014ல் 72 (தெ.ஆப்.,), 2016ல் 89 (வெ.இண்டீஸ்), 2022ல் 40 (இங்கிலாந்து) ரன் எடுத்தார். நேற்றைய அரையிறுதியில் முதன் முறையாக ஒற்றை இலக்க ரன்னில் (9) அவுட்டானார்.7 போட்டி, 75 ரன்இந்திய அணி 'சீனியர்' கோலி. 'டி-20' உலக கோப்பை தொடர் இவருக்கு கடைசியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் இத்தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. களமிறங்கிய 7 இன்னிங்சில் மொத்தம் 75 ரன் (1, 4, 0, 24, 37, 0, 9) தான் எடுத்தார். 5013இந்திய அணி கேப்டனாக, மூன்று வித கிரிக்கெட்டிலும் 5000 ரன்னுக்கும் மேல் எடுத்த 5வது வீரர் ஆனார் ரோகித். இவர் நேற்று 24 ரன் எடுத்த போது, இந்த மைல்கல்லை (மொத்தம் 5013) எட்டினார். முதல் 4 இடத்தில் கோலி (12,883), தோனி (11,207), முகமது அசார் (8095), கங்குலி (7643) உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை