உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சூர்யா வெல்வார் ஆசியா * சேவக் கணிப்பு

சூர்யா வெல்வார் ஆசியா * சேவக் கணிப்பு

புதுடில்லி: ''சூர்யகுமாரின் துணிச்சலான தலைமையில், இந்திய அணி ஆசிய கோப்பை வெல்லும்,'' என சேவக் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை 'டி-20' தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு (செப். 20-26) முன்னேறும். இதில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் செப். 28ல் நடக்கும் பைனலில் மோதும். அனைத்து போட்டிகளும் துபாய், அபுதாபியில் நடக்க உள்ளன.இத்தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 'சோனி லைவ்' மூலம் இணையதளத்திலும் காணலாம். இதற்காக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சேவக் உடன் இணைந்து 'ரக் ரக் மே பாரத் (அனைத்து திசைகளிலும், இந்திய அணிக்காக இணைந்து இருப்போம்) என்ற வாசகத்துடன் விளம்பர படத்தை வெளியிட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழியில் விளம்பரம் வெளியாக உள்ளது.இது குறித்து சேவக் 46, கூறியது:ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இளமை, அனுபவம் கொண்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கேப்டன் சூர்யகுமாரின் (செல்லமாக சூர்யா) துணிச்சலான தலைமையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும். இவரது தாக்குதல் பாணியிலான ஆட்டம், 'டி-20' போட்டிக்கு ஏற்ப, கச்சிதமாக உள்ளது. வெற்றி இலக்குடன் செயல்பட்டால், இந்திய அணி கோப்பை வெல்லலாம்.'அனைத்து திசைகளிலும்...' என்ற விளம்பர படம், இந்திய கிரிக்கெட்டின் இதயத்துடிப்பாக உள்ளது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு மூலம் நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை