உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி: 7 விக்கெட் சாய்த்தார் ஜோசப்

வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி: 7 விக்கெட் சாய்த்தார் ஜோசப்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமன் ஆனது. இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.ஆஸ்திரேலியா சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக பிரிஸ்பேனில் நடந்தது.முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 311, ஆஸ்திரேலியா 289/9 ('டிக்ளேர்') ரன் எடுத்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 193 ரன் எடுத்தது. பின் 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் முடிவில் 60/2 ரன் எடுத்திருந்தது. ஸ்மித் (33), கிரீன் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.சபாஷ் ஷமர்: நான்காம் நாள் ஆட்டத்தில் மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த போது ஷமர் ஜோசப் பந்தில் கிரீன் (42) போல்டானார். பொறுப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்தார். தொடர்ந்து மிரட்டிய ஷமர் 'வேகத்தில்' ஹெட் (0), மிட்சல் மார்ஷ் (10), கேரி (2) வெளியேறினர். ஸ்டார்க் (21) ஆறுதல் தந்தார். கேப்டன் கம்மின்ஸ் (2), லியான் (9) சோபிக்கவில்லை. ஷமர் பந்தில் ஹேசல்வுட் (0) போல்டானார்.ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. ஸ்மித் (91) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஜோசப் 7 விக்கெட் சாய்த்தார்.ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை ஷமர் ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்) வென்றார்.

முதல் தோல்வி

பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் தோல்வியை பெற்றது. இதுவரை விளையாடிய 12 பகலிரவு டெஸ்டில் 11ல் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்